#U19WC2024 : விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது நேபாள அணி..!
நேபாள அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான உலககோப்பையின் 20 வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆப்கான் தொடக்க வீரர்களும் அதற்கடுத்து களமிறங்கிய வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நேபாள அணியின் பந்து வீச்சுக்கு திணறினர்.
#U19WC2024 : இங்கிலாந்து அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்..!
நேபாள அணியின் வீரரான ஆகாஷ் சந்த் மிகச்சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 40.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கான 146 எடுத்தால் வெற்றி பெறலாம் என்று களமிறங்கியது நேபாள அணி.
தொடக்கத்தில் நேபாள அணி ரன்களை எடுக்க திணறியது இருந்தும் அணியின் வீரர்கள் ரன்களை எடுக்க போராடினர். நிதானத்துடன் விளையாடிய வீரர்கள் இலக்கின் அருகில் வந்த போது அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இது 144-9 என்ற இக்கட்டான நிலைக்கு நேபாள அணியை தள்ளியது. கடைசி விக்கெட்டுக்கு கை கோர்த்த வீரர்கள் மிக பொறுமையாக விளையாடினர்.
விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என இருந்த நிலையில் ஓடி ஒரு ரன்னை எடுத்தனர். இதனால் நேபாள அணி 1 விக்கெட் வித்யாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் ஃபரிதூன் தாவூத்சாய் 3 விக்கெட் எடுத்திருந்தார்.
தொடர் தோல்வி காரணமாக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதன் மூலம் நேபாள அணி இந்த தொடரின் முதல் வெற்றியை பெற்றதோடு அடுத்த சுற்றுக்கான வாய்பபையும் பெற்றது.