நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Sandeep Lamichhane

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நேபாள கிரிக்கெட் அணி வீரர் லாமிச்சானே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.

இந்த சூழலில், நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் சந்தீப் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்ததாக தகவல் வெளியானது.

இந்த புகாரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் லாமிச்சானே (23 வயது), பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன்பின், சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குல்தீப் யாதவ் சாஹலை மிஞ்சிவிட்டார்! இம்ரான் தாஹிர் கருத்து!

இதனிடையே, நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லாமிச்சானேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஷிஷிர் ராஜ் தக்கல் அடங்கிய அமர்வு, பாலியல் வன்கொடுமை வழக்கில் மிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, NPR 300,000 அபராதம் செலுத்தவும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு NPR 200,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்