NEDvsBAN: வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டம்.! நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு.!
NEDvsBAN : 2023ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஆனது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 26 லீக் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெருகிறது.
அதன்படி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றனர். இரண்டாவது மற்றும் 28 வது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகிறது. நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் இந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து அடுத்த நான்கு ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதனால் பங்களாதேஷ் அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திலும், நெதர்லாந்து அணி பத்தாவது இடத்திலும் உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் மட்டுமே இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி உள்ளது இதில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, ஈடன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும், 28 வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.
பங்களாதேஷ்:
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(C), முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(W/C), பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்