ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அரையிறுதி செல்லும் வாய்ப்பு இன்னும் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பந்துவீசியது. அதுவும், இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடம் களமிறங்கியது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் ஓவரில் ஓவரிலேயே வெஸ்லி பாரேசி விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் இருந்த மேக்ஸ் ஓ’டவுட் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், 42 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.
#NEDvAFG: அரையிறுதி ரேஸில் நீடிக்குமா ஆப்கானிஸ்தான்? நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
ஆல் ரவுண்டர் கொலின் அக்கர்மேனும் விக்கெட்டை இழக்க, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். பின்னர் இவரும் 58 ரன்களுக்கு விக்கெட்டை விட, இதன்பின் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் குறிப்பாக கேப்டன் உட்பட 4 பேர் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இறுதியாக 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 179 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது நபி 3, நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…