NEDvAFG : நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஆப்கானிஸ்தானுக்கு சுலபமான இலக்கு!

NEDvAFG

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அரையிறுதி செல்லும் வாய்ப்பு இன்னும் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பந்துவீசியது. அதுவும், இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடம் களமிறங்கியது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் ஓவரில் ஓவரிலேயே வெஸ்லி பாரேசி விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் இருந்த மேக்ஸ் ஓ’டவுட் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், 42 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.

#NEDvAFG: அரையிறுதி ரேஸில் நீடிக்குமா ஆப்கானிஸ்தான்? நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ஆல் ரவுண்டர் கொலின் அக்கர்மேனும் விக்கெட்டை இழக்க, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். பின்னர் இவரும் 58 ரன்களுக்கு விக்கெட்டை விட, இதன்பின் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் குறிப்பாக கேப்டன் உட்பட 4 பேர் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியாக 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 179 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது நபி 3, நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  சுலபமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK