NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி, தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்று, தொடர்ச்சியாக அதிக முறை டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

India Vs Pakistan toss

துபாய் : இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து மந்தமாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 32 ஓவர்களில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்.

ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்துவீச்சில் பாபர், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து 23(26) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக, அக்சர் படேல் ந்துவீச்சில் இமாம் உல் ஹக் ரன் அவுட்டானார். தற்போத, நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் சவுத் ஷக்கீல் அரை சதம் அடித்துள்ளார். அவருடன் நிதனமாக ஆடி வரும் முகமது ரிஸ்வான், 44 ரன் எடுத்திருக்கிறார் இன்னும் சிறிது நேரத்தில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மோசமான சாதனை

இந்த நிலையில், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி, தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்று, தொடர்ச்சியாக அதிக முறை டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 12 முறை டாஸை இழந்துள்ளது என ESPNcricinfo இணையதளம் குறிப்பிடுகிறது. அதன்படி, 2023 உலகக்கோப்பையில் தொடங்கி தற்போது வரை ஒருமுறைக்கூட இந்தியா டாஸை வெல்லவில்லை. இப்பட்டியலில் 2வது இடத்தில் நெதர்லாந்து அணி (11 போட்டிகளுடன்) உள்ளது.

தொடர் டாஸ்களை இழந்த அணிகள்

  • 12 – இந்தியா (நவம்பர் 2023 – தற்போது வரை)
  • 11 – நெதர்லாந்து (மார்ச் 2011 – ஆகஸ்ட் 2013)
  • 9 – இங்கிலாந்து (ஜனவரி 2023 – செப்டம்பர் 2023)
  • 9 – இங்கிலாந்து (ஜனவரி 2017 – மே 2017)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்