IND vs NZ Live Score: இந்திய அணி 40 ஓவர்களில் 225 ரன்கள்.!
இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீச்சை செய்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் கில், நிதானமாக விளையாடி அணிக்கு நல்லதொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனையடுத்து, விராட்கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார்கள்.
பனிமூட்டம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 40 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்துள்ளது