நவ்ஜோத் , சச்சின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் இருக்கும் கோலி !
நேற்று முன்தினம் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் , இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 338 ரன்கள் இலக்குடன் இந்திய அணி யின் தொடக்க வீரர்களான ரோஹித் , கே .எல் ராகுல் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே .எல் ராகுல் ரன்கள் எடுக்கலாம் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் கோலி களமிறங்கினர்.இப்போட்டியில் கோலி நிதானமாக விளையாடி 76 பந்தில் 66 ரன்கள்எடுத்து அவுட் ஆனார்.இந்நிலையில் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் கோலி அரைசதத்திற்கு மேல் அடித்து உள்ளார்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதத்திற்கு மேல் அடித்த வீரர்களில் கோலி முதலிடத்தை பிடித்து உள்ளார்.கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் மற்றும் நவ்ஜோத் சிங் இவர்கள் இருவருமே 4 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து இருந்தனர்.தற்போது இவர்கள் இருவரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து உள்ளார்.
கோலி – 5 (2019) *
நவ்ஜோத் சிங் – 4 (1987)
சச்சின் – 4 (1996)
சச்சின் – 4 (2003)
ரோஹித் – 3 (2019)
டிராவிட் – 3 (1999)
யுவராஜ் – 3 (2011)
அசார் – 3 (1992)
கவாஸ்கர் – 3 (1987)