டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18. 2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே சூர்யாகுமார் யாதவ் என்று கூறலாம். ஏனென்றால், கடைசி வரை களத்தில் நின்று 49 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
நிதானமான விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சூர்யாகுமார் யாதவ் பேட்டிங் பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து “ஒரு போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்த அளவுக்கு அருமையாக விளையாடுகிறார் என்றால் நிச்சியமாக அந்த போட்டியில் நீங்கள் போட்டியில் தோற்க முடியாது. அவர் விளையாடும் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுக்கிறார் என்றால், கண்டிப்பாக நான் சொல்வேன் தவறாமல் நீங்கள் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.
நான் எதற்காக இந்த அளவுக்கு உறுதியாக சொல்கிறேன் என்றால் அடிக்கும் வேகத்தால். தான் நான் சொல்கிறேன்.அவர் 20 அல்லது 22 ரன்களில் பேட்டிங் செய்ய வந்த போது 22 லிருந்து 52 ரன்களுக்கு எவ்வளவு விரைவாக சென்றார் என்பதை பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு சிக்ஸர் ஓவர் கவரில், பின்னர் மற்றொரு சிக்ஸர் மற்றும் அதற்குப் பிறகு ஒரு பவுண்டரி அடித்தார். இப்படியே அவர் விளையாடினாள் இந்திய அணி தோல்விக்கு வாய்ப்பு இருக்காது எல்லா போட்டிகளிலும் வெற்றிபெறும்” என்றும் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…