ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் 23 வருட சாதனையை முறியடித்த நாதன் லியான்..!
Nathan Lyon: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இருந்த மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் சாதனையை முறியடித்து 7-வது இடத்தைப் பிடித்தார்.
READ MORE- INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது BCCI ..! இதுதான் மாற்றமா..?
நாதன் லியான், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை லியான் செய்துள்ளார். நாதன் லியான் இதுவரை 128 டெஸ்டில் விளையாடி 521 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கோர்ட்னி வால்ஷ் கடந்த1984 முதல் 2001-ம் ஆண்டு வரை 132 டெஸ்ட் போட்டிகளில் 519 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்) உடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708 விக்கெட்), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (698 விக்கெட்), இந்தியாவின் அனில் கும்ப்ளே (619 விக்கெட்), இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (604 விக்கெட்), கிளென் மெக்ராத் (563 விக்கெட்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
READ MORE- WPL 2024 : ஸ்மிருதியின் போராட்டம் வீண் ..! பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி ..!
521 விக்கெட்டுகளுடன் நாதன் லியான் 7-வது இடத்தில் உள்ளார். இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 383 ரன்கள் எடுத்தனர். அடுத்து இறங்கிய நியூசிலாந்து 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆஸ்திரேலியா 204 ரன்களுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
இன்று 2-ம் நாள் ஆட்ட முடிவில் 13 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலியா 217 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.