இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் தமிழக வீரர்களான நடராஜன், வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்புக்கள் கம்மி என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதிப்போட்டி, வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து டி-20 தொடர், வரும் 14 ஆம் தேதி முதல் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்த டி-20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை இரு அணிகள் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த டி-20 தொடரில் தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. நடராஜனுக்கு முழங்கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், முதல் போட்டிக்கு முன்பு அவர் காயத்தில் இருந்து மீழ்வது சந்தேகம் என கூறப்படுகிறது.
மேலும், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, உடல் தகுதி சோதனையில் தோல்வி அடைந்த காரணத்தினால் அவர் முழு உடல் தகுதி பெறவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகிய நிலையில், தற்போது மீண்டும் உடல் தகுதி இல்லாத காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாட வாய்ப்புகள் கம்மி. அவருக்கு பதில் ராகுல் சாகர் இடம்பெற வாய்ப்பு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…