யாக்கர் மன்னன் நடராஜன், மேக்ஸ்வெலின் விக்கெட்டை சர்வதேச டி-20 போட்டியில் இரண்டாம் முறையாக வீழ்த்தினார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மேக்ஸ்வெல், மத்தேயு வேட் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியில் ஸ்கொரை உயர்த்தினார்கள்.
அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 54 ரன்களும், மத்தேயு வேட் 80 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்த போட்டியில் யாக்கர் மன்னன் நடராஜன் கடைசி ஓவர் வரை ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்திலே மேக்ஸ்வெலின் விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி, மேக்ஸ்வெலின் விக்கெட்டை சர்வதேச டி-20 போட்டியில் இரண்டாம் முறையாக வீழ்த்தினார், நடராஜன். இதற்கு முன் முதல் டி-20 போட்டியில் மேக்ஸ்வெல் விக்கெட்டை LBW முறையில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…