T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா.. ஒரு இடத்திற்கு 3 அணிகள் போட்டி..!

Published by
murugan

நமீபியா அணி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆப்பிரிக்கா குவாலிஃபையர்ஸ் போட்டியில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா பெற்றது. நமீபியா ஐந்து போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடைசி ஒரு இடத்திற்கு ஜிம்பாப்வே, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.

தான்சானியா தோல்வி: 

ரிச்சர்ட் எராஸ்மஸ் தலைமையிலான நமீபிய அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று இறுதி ஆட்டத்தில் நமீபியா 58 ரன்கள் வித்தியாசத்தில் தான்சானியாவை வீழ்த்தியது. தகுதிச் சுற்று முழுவதும் நமீபியா சிறப்பாக செயல்பட்டது. இன்று நடைபெற்ற கடைசி தகுதிச் சுற்றில் தான்சானியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் இறங்கிய நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. நமீபியா அணிக்காக ஜேஜே ஸ்மித் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 40* ரன்கள் எடுத்தார். 158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தான்சானியா அணி 20 ஓவர்  முடிவில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற அணிகள்: 

இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,  நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

10 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

10 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago