டி20I : 20 ஓவர் உலகக்கோப்பையின் 3-வது போட்டியில் இன்று B- பிரிவில் உள்ள நமீபியா அணியும், ஒமான் அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஒமான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடிய ஒமான் அணி தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்தது. ஒமான் அணியின் ஜீஷன் மக்சூத் (22 ரன்கள்) மற்றும் காலித் கைல் (34ரன்கள்) இருவரின் போதிய நிதானமான ஆட்டத்தால் அந்த அணி சிறிதளவு ரன்களை சேர்த்தது. இருப்பினும் விக்கெட்டுகளையும் ஒரு பக்கம் இழந்து கொண்டே இருந்தது.
இதன் காரணமாக ஒமான் அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனை தொடர்ந்து 105 என்ற இலக்குடன் பேட்டிங் களமிறங்கியது நமீபியா அணி. எதிர்பாராத விதமாக முதல் விக்கெட்டை பறிகொடுத்த நமீபியா அணி பின் 2-வது விக்கெட்டுக்கு நன்கு கூட்டணி அமைத்து விளையாடினார்கள்.
ஜான் ஃப்ரைலின்க் (45 ரன்கள்) மற்றும் நிகோலாஸ் டேவின் (24 ரன்கள்) இருவரின் பொறுமையான ஒரு ஆட்டத்தால் இலக்கை நோக்கி நகர்ந்தது. ஆனால், ஒமான் அணியின் அபார பந்து வீச்சில் திடிரேன விக்கெட்டுகள் சாய தொடங்கி நமீபியா அணி மிகவும் தடுமாறியது. மேலும், போட்டியும் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.
இறுதியில், கடைசி ஓவருக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மெஹ்ரான் கான் அந்த ஓவரை அற்புதமாக வீசி 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுப்பார். இதனால் போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்று விடும். சூப்பர் ஓவரில் நமீபியா அணி முதலில் அற்புதமாக பேட்டிங் செய்து 21 ரன்கள் சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து 22 ரன்களை எடுக்க களமிறங்கிய ஒமான் அணியின் பேட்ஸ்மேன்கள் வைஸ்ஸின் அபார பந்து வீச்சில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர். இதன் காரணமாக நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று த்ரில் வெற்றியை ருசித்தது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…