எனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான் – தோனி..!
எனது கடைசி போட்டி சென்னையில்தான் என நினைக்கிறேன் என தோனி தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் பிசிசி செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய தோனி, 2008-இல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை தேர்வு செய்வார்கள் என நினைக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் பல்வேறு மாநிலங்களில் கடந்து வந்துள்ளேன்.
சென்னை மிகச் சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளது. தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்களை உற்சாகபடுத்துவார்கள், அதுதான் அவர்களது சிறப்பு. சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.
சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. எனது கடைசி போட்டி சென்னையில்தான் என நினைக்கிறேன். அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி, 5 ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில் தான் கடைசி போட்டி என தெரிவித்தார்.
A promise from #Thala…#Anbuden awaiting… ????????#WhistlePodu #Yellove pic.twitter.com/zGKvtRliOY
— Chennai Super Kings – Mask P????du Whistle P????du! (@ChennaiIPL) November 20, 2021