எனது குழந்தைகளை பாசத்தோடு கட்டித்தழுவ முடியவில்லை..! சாகித் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி வீடியோ ஒன்றில் தனது குழந்தைகளை அன்போடு கட்டித்தழுவ முடியவில்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தோற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், 40 வயதான இவர் கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதை கேள்விப்பட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியது, நான் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களில் எனது உடல் பழைய நிலைமைக்கு திரும்பியது, என்றும், நல்ல வேலை எனக்கு கொரோனா சிறிது நாட்கள் கழித்து வந்தது முன்பே வந்திருந்தால் என்னால் உதவி செய்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு இதில் எனக்கு உள்ள மிகப்பெரிய மனவருத்தம் எனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை, அவர்களை அன்போடு கட்டித்தழுவ முடியவில்லை, என்பது தான் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது , மேலும் இந்த சமயத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது தான் மிகவும் முக்கியம். உங்களை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருப்பதற்காக நீங்கள் சமூக இடைவெளியுடன் இருங்கள்.
மேலும் நீங்கள் அனைவரும் கொரோனா வைரஸ் குறித்து அச்ச பட தேவையில்லை, என்றும, நான் குணமாக கடவுளிடம் வேண்டிய அனைவர்க்கும் மிகவும் நன்றி என கூறி வீடியோவில் பேசி முடித்துள்ளார்.