தமிழகத்தை சேர்ந்த ” பயமில்லாத “நடராஜன் தான் எனது ஹீரோ -கபில் தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஐபில் 2020 போட்டியின் தனது ஹீரோ நடராஜன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
8 வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சிமாநாட்டின் 2 ஆம் நாளில் மூத்த விளையாட்டு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அயாஸ் மேமனுடன் உரையாடிய கபில் தேவ் ,தமிழகத்தை சேர்ந்த 29 வயதேயான நடராஜன் தனது துல்லியமான யாக்கரால் தன்னை கவர்ந்து விட்டதாக புகழ்ந்துள்ளார்
நடராஜன் தான் என்னுடைய ஹீரோ ,இந்த இளம் வயதில் சிறிது கூட பயமில்லாமல் பல யாக்கர்களை வீசுகிறார்.கிரிக்கட்டில் யாக்கர் தான் சிறந்த பந்து, இன்று மட்டுமல்ல, கடந்த 100 ஆண்டுகளில் கூட, ”என்று கபில் தேவ் கூறினார்.
நடந்து முடிந்த ஐபிலில் சுட்டிக்காட்டக்கூடிய சிறந்த வீரராக நடராஜன் உருவெடுத்தார்.எஸ்.ஆர்.ஹெச் அணிக்காக விளையாடிய நடராஜன் தொடர் முழுவதும் பல முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார் ,அதில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்களை வீழ்த்தியது முக்கியமானவையாகும் .இது அவரை ஆஸ்திரேலியா தொடரில் 20 ஓவர் போட்டியில் இடது கை பந்து வீச்சாளராக அவரை சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளது .
நடராஜன் கிரிக்கெட் வாழ்க்கை என்பது பல தடைகளை தாண்டிய மன உறுதியை கொண்ட கதையாகும்.இவரது தந்தை ரயில் நிலையத்தில் ஒரு போர்ட்டர், அவரது தாயார் தினசரி கூலித் தொழிலாளி. ஆனால் அது எதுவும் நடராஜன் உள்ளூர் கிரிக்கெட் வட்டாரங்களில் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கவில்லை,அதுவே அவரை ஒருபடி மேலே சென்று சென்னை கிரிக்கெட் கிளப்பில் விளையாட நகர்த்தியது .அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட ஒரு காயத்தை சமாளித்து அவரது பந்துவீச்சில் கவனத்துடன் வேலை செய்ய வேண்டியிருந்தது.
பின்னர் அவர் அதை தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நிருபித்துக்காட்டினார் ,அங்குதான் அவர் கிங்ஸ் லெவன் தேர்வுக்குழுவினரால் அடையாளம் காணப்பட்டார். அவர் 2017 ஏலத்தில் பஞ்சாப் அணியால் ரூ .3 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் அவரை வைத்திருக்க அவர் போதுமான அளவு தனது திறமையை காட்டமுடியாமல் போனது,அதனால் அவர் எஸ்.ஆர்.எச். யின் மற்றொரு வாய்ப்பைப் பெற அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், நடராஜன் அதை முன்னோக்கி செலுத்துவதில் தன்னை மும்முரமாக வைத்திருந்தார் என்று நடராஜனை புகழ்ந்துள்ளார்.
-தினச்சுவடு சார்பாக வாழ்த்துக்கள் நடராஜன் .