“எனது நண்பரின் தாயாருக்கு உடனடியாக உதவி தேவை”- ராகுல் தெவாத்தியா ட்வீட்!
இந்தியாவில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தனது நண்பரின் தாயாருக்கு ரெம்டெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதகாக ராகுல் தெவாத்தியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா இரண்டாம் அலையில் முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ராகுல் தெவாத்தியா, தனது நண்பருக்கு தாயாருக்கு உதவி தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், தனது நண்பரின் தாயாருக்கு ரெம்டெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதகாகவும், அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதால் தயவுசெய்து உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
My friend’s mom needs ramdecivir urgently as the doctors have said she isn’t safe.Please help pic.twitter.com/IoatCTeKe1
— Rahul Tewatia (@rahultewatia02) April 21, 2021