#BREAKING : முஸ்டாக் அலி: மீண்டும் கோப்பை கைப்பற்றிய தமிழக அணி..!
சையது முஸ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தக்க வைத்தது தமிழ்நாடு அணி.
முஷ்டாக் அலி இறுதிப் போட்டியில் இன்று தமிழ்நாடு, கர்நாடகா அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து. முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தனர். 152 ரன்கள் இலக்கு உடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கர்நாடக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி திரில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி கடைசி பந்தில் அதிரடி வீரர் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து தமிழகத்தை வெற்றிபெறச் செய்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாருக்கான் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், இதுவரை மூன்று முறையும் முஷ்டாக் அலி கோப்பையை தமிழக அணி வென்றுள்ளது.
காலிறுதிப் போட்டியில் தமிழக அணி கேரளா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கர்நாடகாவில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
WHAT. A. FINISH! ???? ????
A last-ball SIX from @shahrukh_35 does the trick! ???? ????
Tamil Nadu hold their nerve & beat the spirited Karnataka side by 4 wickets to seal the title-clinching victory. ???? ???? #TNvKAR #SyedMushtaqAliT20 #Final
Scorecard ▶️ https://t.co/RfCtkN0bjq pic.twitter.com/G2agPC795B
— BCCI Domestic (@BCCIdomestic) November 22, 2021