பயிற்சியின் போது தலையில் தாக்கிய பந்து..! வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலையில் பந்து தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தலையில் பந்து வேகமாக தாக்கிய நிலையில் அதன் காரணமாக ரஹ்மான் கீழே சரிந்து விழுந்திருக்கிறார்.
வங்காளதேசத்தில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வலைப்பயிற்சியின் போது ரஹ்மான் பந்துவீசுவதற்காக ஒடிக்கொண்டிருந்த போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றொரு வீரர் அடித்த பந்தே அவரை தாக்கியுள்ளது.
INDvsENG : இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஹ்மான் பந்துவீச ஓடிய போது அவர் தலையில் பந்து தாக்கியது, இதன் காரணமாக அவர் தலையில் இருந்து ரத்தம் வடிந்தது. தொடர்ந்து ரஹ்மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஆம்புலன்சில் இம்பீரியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரஹ்மானுக்கு எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேனில் உள் காயங்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.