இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முரளிதரன் தல தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம்.
இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் முந்திய காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார், இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார் அதில் கூறியது தோனியின் கேப்டன்சயில் மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு பந்து வீச்சாளரையும் அவர் நம்புவார்.
எந்த ஒரு பந்துவீச்சாளர்களும் பீல்டிங் செட் செய்வதற்கு அனுமதி அளிப்பார் ஒருவேளை அந்த பில்டிங் சரியில்லை என்றால் நான் பில்டிங் மாற்றவா என அவர் கேட்டுவிட்டு மாற்றுவார் மேலும் சில நல்ல பந்தில் சிக்ஸர் பறக்கும் பொழுது சூப்பர் என்று கூறுவார் அதற்குப் பிறகு சிக்ஸர் போனது பெரிய விஷயம் இல்லை நீங்கள் வீசியது அருமையான பந்து அதனை சிக்ஸர் அடிக்கும் அளவுக்கு அவர் ஒரு சிறப்பான வீரர்என்றும் கூறுவார் என்று முரளிதரன் கூறியுள்ளார்.
மேலும் பேசிய முரளிதரன் கேப்டன்ஷிக்கு மிகவும் முக்கியமான விஷயம் நிதானமாக செயல்பட வேண்டும் அது தோனியிடம் அந்த பண்பு அதிகமாகவே உள்ளது, மேலும் தனது வயதிற்கு மேல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கீழுள்ள வீரர்கள் என அனைவருக்கும் அவர் மமதிப்பு அளிப்பார் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…