லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?
லக்னோவுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுததாகக் கூறப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கண்கலங்கி அழுததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. ஆனால், உண்மையில் லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது அவர் அழுகாமல் வேறு எதையாவது யோசித்துக்கொண்டு இருந்தாரா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்கள் மட்டுமே அவர் அழுததாக கூறி வருகிறார்கள். ஆனால், போட்டிக்கு பிறகு அவர் அழுதது போல பேசவில்லை சற்று வேதனையாக தான் பேசினார்.போட்டி முடிந்த பிறகு பேசிய அவர் ” இந்த போட்டி என்னைப்பொறுத்தவரை ஒரு கடினமான போட்டி. நாங்கள் நன்றாக ஆடினோம், ஆனால் சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. திலக் வர்மாவை திரும்ப அழைத்தது எங்களுடைய முடிவு தான்.
ஒரு சில நாட்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து பேட்டில் படாமல் இருக்கும். அப்படி தான் திலக் வர்மாவுக்கு பேட்டில் படவில்லை. எனவே, இதன் காரணமாக தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். பந்துவீச்சில் சில தவறுகள் நடந்ததாகவும், அதை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும், சீசன் இன்னும் தொடக்கத்திலேயே இருப்பதால், அணி திரும்பி வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.