#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!
இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
மும்பை அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்டியா, பொல்லார்ட், குருனல் பாண்டியா, நாதன் கூல்டர், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.
பஞ்சாப் அணி வீரர்கள்:
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 6 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.