ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 32 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொற்ப ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள். பின்னர் மத்தியில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் போல அதிரடியாக விளையாடி 40 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம் 82 ரன் விளாசினார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 4, ரஷித் கான், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். 236 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய் 6 பவுண்டரி அடித்து 34 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அபிஷேக் சர்மா 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய முகமது நபி 3, அப்துல் சமத் 2 ரன் எடுத்து அடுத்தது விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களம் கண்ட மணீஷ் பாண்டே, பிரியம் கர்க் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியம் கர் 29 ரன் எடுத்த போது ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்தார். சிறப்பாக விளையாடிய வந்த மணீஷ் பாண்டே அரைசதம் விளாசி 69 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் மும்பை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்த்திற்கு வந்து பிளே ஆப் தகுதியை இழந்தது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…