ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..!
ஐபிஎல் 2024: டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணி மோதியது. இந்தபோட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டையும், கலீல் அகமது 1 விக்கெட்டையும் பறித்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 49 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் , ஹர்திக் பாண்டியா 39 ரன்களும் எடுத்தனர். அதேநேரத்தில் மத்தியில் இறங்கிய டிம் டேவிட் 45* ரன்களும், ரொமாரியோ 10 பந்தில் 39* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
235 ரன்களுடன் டெல்லி அணி தொடக்க டேவிட் வார்னர், பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். 4-வது ஓவரில் டேவிட் வர்னர் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதை அடுத்து அபிஷேக் போரல் களமிறங்கினார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைச்சதம்விளாசினார்.
இருப்பினும் 12-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் போல்டாகி 66 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்க வந்த வேகத்தில் 11 பந்தில் 26 ரன்கள் எடுக்க எதிர்முனையில் விளையாடி வந்த அபிஷேக் போரல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பந்த் 3-வது பந்திலே 1 ரன் எடுத்து வெளியேறினார்.
களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்தில் அரைசதம் விளாசி 71* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டையும் , ரொமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட்டையும் பறித்தனர். மும்பை அணி 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி 5 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.