மும்பை அணி 8.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது . ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் 24 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன் பின் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை அணியில் சிறப்பாக நாதன் குல்டர் நைல் 4, ஜேம்ஸ் நீஷம் 3, ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
91 ரன்கள் இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரராக வீரர்களாக இஷன் கிஷன், ரோஹித் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ரோகித் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 3 பவுண்டரி என மொத்தம் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசி கடைசிவரை 50* ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இறுதியாக மும்பை அணி 8.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதனால் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் எடுத்து மும்பை 5-ஆம் இடத்திற்கு முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியை தழுவியதால் ராஜஸ்தான் பிளே ஆப் தகுதியை இழந்தது.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…