மும்பை vs லக்னோ: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? – டாஸ் நிலவரம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு.
நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றை 26-வைத்து லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 5 போட்டியிகள் தோல்வியை சந்தித்து வரம் மும்பை அணி, இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ் இடம்பெற்றுள்ளனர்.