மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை அணியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 72*, டு பிளெசிஸ் 50 , மொயின் அலி 58 ரன்கள் எடுத்தனர். 219 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி கோக் 38 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பொல்லார்ட், க்ருனால் பாண்டியா இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் கூட்டணியில் 90 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடி வந்த பொல்லார்ட் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். கடைசிவரை களத்தில் பொல்லார்ட் 87* ரன்களுடன் நின்றனர். சென்னை, மும்பை தலா 7 போட்டிகளில் விளையாடி சென்னையில் 5 வெற்றிகளையும், 2 தோல்வி தழுவியுள்ளது . மும்பை 4 வெற்றிகளையும், 3 தோல்வியை தழுவியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…