#IPL2020 : 200 ரன்களுக்கு மேல் அடித்த மும்பை அணி ! டி காக் அரை சதம்
இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 208 ரன்கள் அடித்துள்ளது.
இன்று நடைபெறும் 17-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிவருகின்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது .டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ,டி காக் ஆகியோர் களமிறங்கினர்கள்.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலே ஹைதராபாத் வீரர் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ரோகித் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து டி காக் மற்றும் சூர்யகுமார் ஜோடி சிறப்பாக விளையாடியது.ஆனால் சூர்யகுமார் 27 ரன்களில் கவுல் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.பின்பு இஷான் 31 ரன்கள் ,ஹர்டிக் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் பொல்லார்ட் 25 *ரன்கள் , க்ருனால் 20* ரன்களுடன் இருந்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் சந்தீப் ,கவுல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.
.