இன்றைய 27-வது போட்டியில் மும்பை Vs டெல்லி அணிகள் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிருத்வி ஷா 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், இறங்கிய ரஹானே 15 ரன் மட்டுமே எடுக்க இதைத்தொடர்ந்து, களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 42 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
தொடக்க வீரராக இறங்கிய தவான் நிதானமாகவும், அதிரடியாவும் விளையாடி 69 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி 163 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக், ரோஹித் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன் எடுத்து வெளியேறினார்.
இவரை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்க குயின்டன் டி கோக் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இருவருமே 53 ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தனர். பின்னர், இறங்கிய இஷான் கிஷன் 28 ரன் எடுக்க இறுதியாக மும்பை அணி 5 விக்கெட்டை இழந்து 19.4 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால், மும்பை புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…