ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா குவின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடி வந்த ரோகித் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர், சிறப்பாக விளையாடிய குவின்டன் டி காக் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 5 பவுண்டரி அடங்கும்.
இதையடுத்து, இறங்கிய சூர்யகுமார் யாதவ் 17 ரன்களில் வெளியேற, பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஹார்திக் பாண்ட்யா தொடர்ந்து 2 சிக்ஸர் விளாசினார். இந்நிலையில், அதிரடியாக விளையாடி வந்த திவாரியை 14-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் டு பிளிஸ்சிஸிடம் தனது கேட்சை திவாரி கொடுத்தார்.
திவாரி 42 ரன்கள் விளாசினார். அதில், 3 பௌண்டரி 1 சிக்ஸர் அடங்கும். அதேபோல ஹார்திக் பாண்ட்யாவும் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் டு பிளிஸ்சிஸிடம் தனது கேட்சை கொடுத்தார். பின்னர், இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , பொல்லார்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.
சென்னை அணியில் லுங்கி நிகிடி 3 , ரவீந்திர ஜடேஜா 2 மற்றும் சாம்கரண் , தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். சென்னை அணி 163 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது .
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…