#IPL 2021 : இன்று மும்பை – பஞ்சாப் அணிகள் மோதல்..!!

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகள் மோதியதில் 26 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 முறை மும்பை அணியும், 12 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடம் அல்லது இரண்டாவது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதைபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 4 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னேறி செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.