சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17 மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு இது தான் கடைசி போட்டியும் கூட. மும்பை அணி புள்ளி விவர பட்டியலில் 10-வது இடத்திலும், லக்னோ அணி 7-வது இடத்திலும் இருக்கிறது.
இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் போட்டியில் பெருமைக்காக விளையாடுவார்கள். ஏனென்றால், இந்த சீசனில் கொல்கத்தா அணி, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட்டது. இன்னும் ஒரு அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இருக்கும் நிலையில், லக்னோ அணி 7-வது இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் அணி முன்னிலையில் இருக்கிறது.
எனவே, 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது சென்னை அணியா அல்லது பெங்களூர் அணியா என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழலில் இன்றயை போட்டியில் மும்பை அணியும் சரி, லக்னோ அணியும் சரி பெரிய அளவில் அழுத்தம் இல்லாமல் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் 5 முறை மோதியுள்ளது. அதில் 1 முறை மட்டுமே தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று இருக்கிறது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் லக்னோ அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. நேருக்கு நேர் மோதிரத்தை வைத்து பார்க்கையில் அதிகமுறை லக்னோ தான் வெற்றிபெற்று இருக்கிறது.
நடப்பாண்டு ஐபிஎல் சீசன் முதல் பாதி அதாவது மும்பை ஆடிய முதல் 7 போட்டிகளில் தொடக்கட்ட ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் பார்ம் நன்றாக இருந்தது. ஆனால், அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியில் ரோஹித் சர்மாவின் பார்ம் விமர்சித்து பேசும் அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால், கடைசி 6 இன்னிங்ஸ்களில் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதன் காரணமாகவே அவருடைய பேட்டிங் குறித்த விமர்சனங்களும் எழுந்துகொண்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டி முடிந்து அவர் டி20 உலகக்கோப்பை போட்டியிலும் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த சூழலில் அவருடைய பேட்டிங் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் மோசமாக இருப்பதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில் லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெரிய ரன்கள் அடித்து கம்பேக் கொடுப்பார் என அவருடைய ரசிகர்கள் காத்துள்ளனர்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…