மும்பை தான் அடுத்த டார்கெட்…300 ரன்களை பார்க்க போறோம்! முன்னாள் வீரர் கணிப்பு!

ஏப்ரல் 17-ஆம் தேதி ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் தான் ஐபிஎல் வரலாற்றில் நாம் முதன் முறையாக 300 ரன்களை பார்க்க போகிறோம் என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

MI VS SRH

ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் இப்படி அதிரடியாக இருக்கனும் என ஒரு காலத்தில் பெங்களூர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இப்போது ஹைதராபாத் அணி 280 ரன்கள் கூட அசால்ட்டாக எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு எந்த அளவுக்கு அதிரடியாக விளையாடியதோ அதே போலவே இந்த ஆண்டும் அதே அதிரடியுடன் தான் விளையாடி தான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.

மார்ச் 23-ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியை ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என தெறிக்கவிட்டு எதிரணி வீரர்களுக்கு பயத்தை காட்டியது என்றே சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் அதிகம் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிக ரன். இதற்கு முன்பு கடந்த ஆண்டு 287 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் புடைத்திருந்தது.

தொடர்ச்சியாக இப்படி அதிரடியாக விளையாடி வரும் ஹைதராபாத் அணி  300 ரன்கள் எடுத்து அசைக்கமுடியாத சாதனையை படைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் விளையாடி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே 300 ரன்களை பார்க்க போகிறோம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ” வருகின்ற ஏப்ரல் 17-ஆம் தேதி ஹைதராபாத் அணி மும்பை அணியை எதிர்கொள்ளவிருகிறது. அந்த போட்டி மிகவும் அதிரடியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அந்த நாளில் தான் ஐபிஎல் போட்டிகளில் முதல் 300 ரன்களை நாம் பார்க்க போகிறோம் என்று தோணுகிறது. அந்த போட்டியை பார்க்க தான் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனவும் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் தான் ஹைதராபாத் அதிரடியாக விளையாடவே தொடங்கியது. அந்த போட்டியில் 277 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை முதல் முறையாக தொடங்கியது. அங்கு தொடங்கி இப்போது 280 க்கு மேல் அடித்து சாதனைகளை படைத்தது வருகிறது. எனவே, அதிரடி  தொடங்கிய அணியுடன் மீண்டும் வருகின்ற ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காரணத்தால்  டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்