ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று முடிந்த 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா – டி-காக் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர்.
இதில் 14 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா வெளியேற, அதன்பின் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து க்ருனல் பாண்டியா களமிறங்க, அவர் டி-காக்குடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இதில் டி-காக் அரைசதம் விலாச, மத்தியில் ஆடிவந்த க்ருனல் பாண்டியா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து 39 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் போலார்டு களமிறங்க, அவர் டி-காக்குடன் இணைந்தார்.
இருவரின் அதிரடியான ஆட்டத்தினால் மும்பை அணி, 18.3 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டி-காக், 50 பந்துகளுக்கு 70 ரன்கள் அடித்தார். இதில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். இந்த போட்டியில் போலார்டு, 8 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…