#IPL2020 : மும்பை அணி பந்துவீச முடிவு ! பெங்களூர் அணியில் அதிரடி மாற்றம்
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 10-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றது. இப்போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம் :
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், கிருனல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன் ),உடனா , ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ், படிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, குர்கீரத் , ஆடம் சம்பா , சாஹல், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.