#IPL2020 : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 20-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் மைதானத்தில் (Sheikh Zayed Stadium) நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 3 வெற்றி,2 தோல்வி அடைந்துள்ளது.மும்பை அணி 6 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில் உள்ளது.ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 2 வெற்றி,2 தோல்வி அடைந்துள்ளது.இதனால் 4 புள்ளிகளுடன் அணி 5-வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணியின் வீரர்கள் விவரம் :
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன் ), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, ஜெய்ஸ்வால் , ராகுல் திவாட்டியா, டாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்,மகிபல் லொம்ரோர் , தியாகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம் :
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருனல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.