#image_title
SRHvsMI : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் நடைபெற்று முடிந்து இருக்கும் நிலையில், இன்று 8-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.
இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதன்படி, முதல் போட்டியில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடியது அந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதைப்போல, ஹைதராபாத் அணி முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டு விளையாடியது. அந்த போட்டியில் 4 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
எனவே, மும்பை மற்றும் ஹைதராபாத் இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், கண்டிப்பாக இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்புடன் களம் காண்கிறது.
நேருக்கு நேர்
இதற்கு முன்பு மும்பை அணியும் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேராக 21 போட்டிகள் மோதியுள்ளது. இதில் 12 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று இருக்கிறது. 9 முறை மட்டுமே ஹைதராபாத் அணி வெற்றிபெற்று இருக்கிறது. எனவே, நேருக்கு நேர் புள்ளி விவரத்தை வைத்து பார்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியே அதிகமுறை வெற்றிபெற்று இருக்கிறது.
இன்று விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI)
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் :
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வுட்.
ஹைதராபாத் அணி வீரர்கள் :
மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…