MIW vs DCW : ஒரே ஓவரில் ஒரே ரன்னில் சரிந்தது முதல் விக்கெட்… திணறும் மும்பை இந்தியன்ஸ்.!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிரடியாக பந்து வீச தொடங்கிய ஷிகா பாண்டேயின் மூன்றாவது பந்தில் ஹேலி மேத்யூஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

Mumbai Indians Women vs Delhi Capitals Women

வதோரா : ஐபிஎல் போன்று 20 ஓவர் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. நேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இதில், குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து,இன்று வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் WPL 2025-இன் 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன்கேப்டன் மெக் லானிங்  முதலில் பந்துவீச தேர்வு செய்தார்.

இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் முதலில் களமிறங்கினர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிரடியாக பந்து வீச தொடங்கிய ஷிகா பாண்டேயின் மூன்றாவது பந்தில் ஹேலி மேத்யூஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். இதனை தொடர்ந்து நாட் ஸ்கைவர்-பிரண்ட் நிதனமாக விளையாடி வருகிறார்.

இதற்கு முன், இந்த மகளிர் பிரீமியர் லீக்கில் இரு அணிகளும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், MI மூன்று வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் DC இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியர்கள் மகளிர் அணி

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில், ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், சஜீவன் சஜானா, அமன்ஜோத் கவுர், ஜிந்திமணி கலிதா, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணி

கேப்டன் மெக் லானிங் தலைமையிலான அணியில், ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், நிகி பிரசாத், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, மின்னு மணி, ராதா யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
gold price
virat kohli lion
CrimeAgainstWomen
LIVE DMK
Maaveeran sk
rachin ravindra