#IPL2022: வெற்றியை சந்திக்குமா மும்பை இந்தியன்ஸ்? 199 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்தார்கள்.
பந்துகளை பவுண்டரிகளை நோக்கி தள்ளிய மயங்க அகர்வால் அரைசதம் விலாச, 52 ரன்கள் அடித்து தந்து விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய பைரஸ்ட்டோ 12 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அதிரடி வீரர் லிவிங்ஸ்டன், 2 ரன்கள் எடுத்து அவரும் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த தவான் 50பந்துகளில் 70 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025