வெற்றிக்கு இவர் தான் காரணம்… ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

Hardik Pandya

ஐபிஎல்2024: மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம் என்று முதல் வெற்றியை ருசித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் குறிப்பாக தொடர் தோல்வியில் இருந்து மும்பை அணி நேற்று களமிறங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.

இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டியளித்தார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது மிகவும் கடினமான உழைப்பு.

இந்த சீசனுக்காக எங்கள் அணியின் விளையாடும் 12 வீரர்களை சில வியூகங்களின் அடிப்படையில் அமைத்து வந்தோம். மனதளவில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டி சூழல் இருந்தது. எங்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகம் உள்ளது. அதை டிரஸ்ஸிங் ரூமில் பார்க்க முடிகிறது. சரியான நேரத்தில் எங்கள் அணியை செட்டில் செய்வது அவசியம். அந்த வகையில் இதுவே எங்களது அணியாக இருக்கும் என நம்புகிறேன்.

தோல்வியில் இருந்து மீண்டெழ எங்களுக்கு ஒரே ஒரு வெற்றி தேவை என்று அனைவரும் நம்பினோம். இன்று ஒரு அற்புதமான தொடக்கமாக இருந்தது. முதல் 6 ஓவர்களில் 70 ரன்களை எடுப்பது எப்போதும் அற்புதமானது. வாய்ப்பு வரும் போது எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ரன் எடுத்ததை பார்க்க நன்றாக இருந்தது.

ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினர். அவர் தான் எங்களுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தார். டெல்லிக்கும் எங்களுக்கும் இடையிலான ரன் வித்தியாசம் ஷெப்பர்ட் குவித்த அந்த ரன்கள் தான். நான் சரியான நேரத்தில் பந்து வீசுவேன். இன்றைய போட்டியில் அதற்கு தேவை ஏற்படவில்லை என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்