hardik pandya [file image]
ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி அந்த மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்தகாக 4-வது போட்டியில் மும்பை அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது. நாளை இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் பயிற்சி செய்யும் வீடியோவும் வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து சோம்நாத் கோவிலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாமிவழிபாடு செய்த வீடியோவும் வைரலாகி கொண்டு வருகிறது.
நேற்று ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோவிலில் சென்று நிதானமாக மனதை ஒருநிலை படுத்தி சுவாமி வழிபாடு செய்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மும்பை அணி வெற்றிபெறவேண்டும் என்று தான் சோம்நாத் கோவிலில் சென்று அங்கு சுவாமியை வழிபாடு செய்தார் என்று கூறிவருகிறார்கள்.
மேலும், இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் இன்னும் ஒரு முறை கூட போட்டியில் மும்பை வெற்றிபெறவில்லை என்பதால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியின் மூலம் பதிலடி கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…