டிவில்லியர்ஸ் போராட்டம் வீண்! மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது
பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட்டுக்களையும் இழந்தது. மும்பை அணியின் சார்பில் ரோஹித் சர்மா 48 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் அடித்தனர். பெங்களூருவின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின்னர் 188 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி எளிதாக இலக்கை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. துவக்க வீரர்கள் பர்த்திவ் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என ஏபி டி வில்லியர்ஸ் போராடினார் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லஷித் மலிங்கா பந்து வீசினார்.
ஆனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்