3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,
163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஹைதராபாத் அணி சார்பாக, அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷானால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.
அனிகேத் 8 பந்துகளில் 18 ரன்களும், கம்மின்ஸ் 4 பந்துகளில் 8 ரன்களும் எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் வில் ஜாக்ஸ் 3 ஓவர்களில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்டிக் பாண்ட்யா மற்றும் டிரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது.
பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி சார்பாக, ரோஹித் நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால், ரோஹித் சர்மா 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மேலும், நிதானமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக, ரிக்கிள்டன் 23 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரை பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்கச் செய்தார். வில் ஜாக்ஸும் சூர்யகுமாரும் வேகமாக பேட்டிங் செய்து, 12 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தனர்.
ஹார்டிக் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். இறுதியில், 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக கேப்டன் பாட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஹர்ஷல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், 7 வது போட்டியில் இன்று வெற்றியின் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. மும்பை அணி 3வது வெற்றியை பதிவு செய்ய, ஐதராபாத் அணிக்கு 5வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025