மும்பை – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்..!! முதல் வெற்றியை பதிவு செய்யுமா SRH.??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 16 போட்டிகளில் மோதியுள்ளது. மோதியதில் 8 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்று இரண்டு அணிகளும் சம நிலையில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதைபோல், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் 2 போட்டிகள் விளையாடி இரண்டுபோட்டியிலுமே தோல்வியடைந்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகள் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் ஹைதராபாத் அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதைபோல் மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025