SRHvsMI : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடியது.
நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மும்பை அணியின் பந்து வீச்சாளராகளை திணறடித்தனர். களமிறங்கிய அனைத்து வீரர்களும் அதிரடி காட்ட ஹைதரபாத் அணி 14.4 ஓவரிலேயே 200 ரன்களை தொட்டனர். அதை தொடர்ந்து கிளாசெனின் அதிரடியில் அணி 20 ஓவருக்கு 3 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோரை கொண்ட அணியாக முதலிடத்தில் ஹைதராபாத் அணி முன்னேறி, பெங்களூரு அணியின் 263 என்ற ஸ்கோரை கடந்து ஆர்.சி.பியின் சாதனையையும் முறியடித்தது. மேலும், ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 63, கிளாசென் 34 பந்துகளில் 80 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் எடுத்திருந்தனர். இதன் மூலம் இமாலய இலக்கான 278 என்ற ரன்களை எடுப்பதற்கு மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
தனது 200-வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மாவும் மற்றும் தொடக்க வீரரான இஷான் கிஷனும் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர் ஆனாலும், அதிஷ்டம் இல்லாமல் ரோஹித் 26 ரன்களிலும், இஷான் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடந்து விளையாடிய திலக் வர்மா அவ்வவ்போது அதிரடி காட்டி களத்தில் இருந்தார். அவருடன் விளையாடிய நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பை அணியும், ஹைதராபாத் அணிக்கு ஈடு கொடுத்து அதிரடியாக விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரை சதத்தை கடந்து விளையாடி கொண்டிருந்தார். அவரும் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அட்டமிழந்த பிறகு எந்த வீரர்களாலும் அடிக்க முடியாமல் திணறினர். அந்த அளவிற்கு ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது, ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு ஓவருக்கு 24 + ஆக உயர ஹைதராபாத் அணியின் வெற்றி சாய்ந்தது.
மும்பை அணியில் களத்தில் இருந்த டிம் டேவிட்டும், ஹர்திக்கும் போராடியும் அந்த போராட்டம் வீணானது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகள் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 34 பந்துக்கு 64 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…