கோவா அணிக்கு தாவும் ஜெய்ஸ்வால்.., அதிர்ச்சியில் உறைந்த மும்பை கிரிக்கெட் சங்கம்.!
உள்ளூர் போட்டிகள் தொடங்கியதும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியில் இருந்து கோவா அணிக்காக விளையாட தடையில்லா சான்றிதழ் கேட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட விரும்புவதாகக் கூறப்படும் நிலையில், அவரது நிலை குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் இறுதியாக தெளிவுபடுத்தியுள்ளது.
உளளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், தற்போது கோவா அணிக்கு மாறவுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையை விட்டு வெளியேறி, கோவா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து ஜெய்ஸ்வால் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ”தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக் கொண்டதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ்நாள் முழுவதும் அந்த அணிக்கு கடைமைப்பட்டிருப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் திடீர் கோரிக்கை குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. அதே நேரம், க ஜெய்ஸ்வாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது MCA செயலாளர் அபய் ஹடாப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர், “ஆமாம், நாங்கள் அவருக்கு NOC வழங்கியுள்ளோம். இது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் மும்பையில் போதுமான பலம் உள்ளது. இப்போது வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். யஷஸ்விக்கு வாழ்த்துக்கள்” என்று MCA செயலாளர் கூறியிருக்கிறார்.