SRHvsMI : பேட்டிங் செய்ய களமிறங்கும் ஹைதராபாத்..!! யாருக்கு முதல் வெற்றி ?
SRHvsMI : ஐபிஎல் தொடரில் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி மும்பை பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி, அவர்களது கடைசி போட்டியில் கொல்கத்தா அணியுடன் வெற்றியின் அருகில் வரை சென்று தோல்வியுற்றது. மேலும், மும்பை அணியும் குஜராத் அணியுடன் ஒரு தோல்வியை தழுவி இந்த போட்டிக்கு வருகிறது.
இதனால் இந்த தொடரில் இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் முதல் வெற்றியை பதிவு செய்யும் போட்டியாகும். இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானம் என்பதால் இரவு நேரத்தில் மைதானத்தில் ஈரத்தன்மை கூடும் என்பதற்காக மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் :
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, மபகா.
ஹைதராபாத் அணி வீரர்கள் :
மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, டிராவிஸ் ஹெட் , பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே