இன்று நடைபெறும் 20-வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய குயின்டன் டி காக் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், சிறிது நேரத்திலே ரோஹித் 35 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி79 * ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். பின்னர், இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.
194 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர். ஆனால், ரன் எடுக்காமல் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர், இறங்கிய ஸ்மித் 6 , சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். அணி மோசமான நிலையில் இருந்தபோது, தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 70 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக ராஜஸ்தான் அணி 18.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், மும்பை அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…