MIvRCB [file image]
ஐபிஎல் 2024: மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் மும்பை , பெங்களூரூ அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணி 20 முடிவில் 8 விக்கெட் பறிகொடுத்து 196 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டை பறித்தார். பெங்களூரூ அணியில் ரஜத் படிதார் 50 ரன்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 197 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்க மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 38 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் அரைசதம் விளாச 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், வில் ஜாக்ஸ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இதுவரை மும்பை அணி 5 போட்டியில் விளையாடிய 2 போட்டி வெற்றியும், 3 முறை தோல்வியையும் தழுவியது. அதே நேரத்தில் பெங்களூரூ அணி 6 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியையும் தழுவியது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…